சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர்

Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Sri Lanka Government Law and Order Suresh Salley
By Rakesh Jun 05, 2026 03:10 PM GMT
Report

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, நாட்டுக்குச் சேவையாற்றிய முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலேவை அதே சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்துச் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.

பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று (05.06.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோர் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் FCIDயினால் கைது

விமல் வீரவன்சவின் முன்னாள் ஊடகச்செயலாளர் FCIDயினால் கைது

சித்திரவதைக்குள்ளாகும் சுரேஷ் சாலே

இங்கு முதலாவதாகக் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத், "முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சாலே நேற்று(04) நீதிமன்றத்தில் பிணை கோரியிருந்த போது, அவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக இரு புகழ்பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர் | Suresh Salley Was Severely Tortured

கடந்த கால மக்கள் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது கூட அவர்களுக்கு எந்தவொரு உடல்ரீதியான சித்திரவதைகளும் செய்யப்படவில்லை.

ஆனால், சுரேஷ் சலேவுக்கு இவ்வாறு நடந்திருக்குமாயின், அதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் டயஸ்போராவை (புலம்பெயர் தமிழர்) மகிழ்ச்சிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

போதியளவு முன் ஏற்பாடுகள் இல்லை..

இதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய இயற்கை அனர்த்த நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், "Rebuilding Sri Lanka கணக்கில் உள்ள நிதி, 'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இதுவரை பயன்படுத்தப்படவில்லை. அரச அதிகாரிகள் தமக்குரிய தீர்மானங்களை எடுக்கப் பயப்படுவதால் அனர்த்த முகாமைத்துவப் பணிகள் முற்றாக முடங்கியுள்ளன.

சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர் | Suresh Salley Was Severely Tortured

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு முன்கூட்டிய தயார்படுத்தல்கள் இருந்தன. ஆனால், இன்று உரிய திட்டமிடல் இல்லாததால் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்கள் மண்ணோடு மண்ணாகி வருகின்றன.

இயற்கை அனர்த்தங்களைக்கூட மேலாண்மை செய்ய முடியாத ஒரு தோல்வியடைந்த அரசாங்கமாகவே தற்போதைய ஆட்சி காணப்படுகிறது என்றார்.

பொருளாதார நெருக்கடி அதிகரிப்பு

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரள,

தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பொய்களைக் கூறி ஆட்சியைப் பிடித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் நிலைமை, 'அந்தரேயின் தோள் மீது கல்லை வைத்த கதை' போன்றதாக மாறியுள்ளது.

தனது சகாக்களுடன் ஆட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாமல் திணறி வரும் ஜனாதிபதி, நாட்டை ஒரு எரிமலை மீது அமர வைத்துள்ளார்.

சுரேஷ் சாலேவுக்கு கடும் சித்திரவதை..! பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் - பகிரங்கப்படுத்தும் மகிந்த தரப்பினர் | Suresh Salley Was Severely Tortured

நேற்றைய நிலவரப்படி, டொலர் ஒன்றின் மதிப்பு 340 ரூபாவாக உயர்ந்துள்ளது. அரசின் நெருங்கிய நண்பர்கள் டொலர்களை தமக்கேற்றவாறு பயன்படுத்த இடமளித்ததன் விளைவாகவே, இன்று சாதாரண ஏழை மக்கள் அரிசி, பருப்பு, சீனி போன்ற அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களை அதிக விலைக்கு வாங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

அத்துடன், நாடாளுமன்றத்தை சுத்தப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அணியில், தமது பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் கூட கண்டுபிடிக்க முடியாத பேராசிரியர்களும், நீதிமன்றில் ஒரு வழக்கைக்கூட வாதாடாத சட்டத்தரணிகளும், மருத்துவமனையில் ஒரு நோயாளிக்குக்கூட மருந்து வழங்காத மருத்துவர்களுமே நிறைந்துள்ளனர்.

இவ்வாறான எந்தவொரு நடைமுறை அறிவும் இல்லாத ஒரு குழுவினரிடமிருந்து நாட்டு மக்கள் எவ்வாறு சிறந்ததொரு அரச நிர்வாகத்தை எதிர்பார்க்க முடியும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.  

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! இன்றும் பதிவான மரணம்

கொழும்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! இன்றும் பதிவான மரணம்

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள்..! அமைச்சர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் முன்னாள் அரசியல்வாதிகள்..! அமைச்சர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US