சுரேஷ் சலேவுக்காக கண்ணீர் விட்ட தேரர்!
தாய்நாட்டிற்காகத் தன் உயிரைப் பணயம் வைத்து புலனாய்வுப் பிரிவில் சேவை செய்த தலைவர் தான் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே.
அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ள விடங்களை நினைக்கும் போது எனது கண்களில் கண்ணீர் வந்தது என்று மொட்டு கட்சியில் அங்கம் வகிக்கும் தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கெக்கிரா நகரத்தில் மொட்டு கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தொடருந்து பேசிய அவர்
சலேவை வைத்து அரசு நடத்தும் நாடகம்
சுரேஷின் மனைவியும் மகனும் அவரைப் பார்க்கச் சென்றபோது 'நான் எனது இறுதிக்காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறேன். நான் இந்த நாட்டை நேசித்தேன்.
இன்றும் இந்த நாட்டை நேசிக்கிறேன். எனது இரு கண்களையும் தானம் செய்வதற்காக நான் எழுதி வைத்துள்ளேன். எனவே அதனை அவ்வாறே செய்யுமாறு அரசாங்கத்திடம் கூறுங்கள்' என்று சுரேஷ் கூறியுள்ளார்.
தனது கண்களை இறுதியாக தானம் செய்ய அவர் தீர்மானித்துள்ளார். இவ்வாறே அவர் தாய்நாட்டிற்கு சேவை செய்தார். அப்படிப்பட்ட சுரேஷ் சாலேயை வைத்துக்கொண்டு இந்த அரசாங்கம் நாடகம் ஆடுகிறது.

இந்த நாடகங்கள் அனைத்தும் வேறு எதற்கும் அல்ல மஹிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச அல்லது நாமல் ராஜபக்சவை சிறையில் அடைப்பதற்கான வழியொன்றைத் தேடுகிறார்கள்.
இப்போது சுரேஷை வெளியே விடுவது கடினம் என்று. அவர் வெளியே வந்தால் இவர்களின் முகத்திரை கிழிந்துவிடும்.அதனால்தான் இவர்கள் இப்போது பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் இந்த நாட்டிற்குச் செய்யும் சாபத்திற்கு எதிராக நாங்கள் மட்டுமல்லாமல் மக்களும் கிடைக்கின்ற முதல் தேர்தலிலேயே உங்களைத் தோற்கடித்த பின்னரே மறுவேலை பார்ப்போம் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri