கோட்டாபயவை காக்க சுரேஸ் சலவை வைத்து செய்யும் தந்திர நாடகம்
30 வருட கால யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தது சுரேஸ் சலே மற்றும் ராஜபக்ச தரப்பினர் தான். அவர்களை நாம் போற்ற வேண்டும் என சில சிங்களக் குழுக்கள் மக்களை தவறான வழியில் நடாத்துவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அதுமட்டுமன்றி தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற சுரேஸ் சலேவின் பரிதாப நிலையை எடுத்துக் கூறி சிங்கள மக்களை குறித்த தரப்பினர் தூண்டிவிடும் வகையில் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையிலே, சுரேஸ் சலேவிற்கு ஆதரவாக நேற்றையதினம்( 8.6.2026) உதயகம்மன்பில, விமல்வீரவன்ச ஆகியோர் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து இருந்தனர்.
இவ்வாறெல்லாம் சுரேஸ் சலேவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி இருந்தாலும் நேற்றையபோராட்டத்தில் குறைந்த அளவிலானவர்களே சமூகமளித்திருந்ததை காணமுடிந்தது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்