விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் வெளிப்படுத்தப்படுவார் என்று தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிடும்போது அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சுரேஷ் சாலேவிற்காக வெடித்துள்ள போராட்டம்! கூடாரங்களை அகற்றிய பொலிஸார் - பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
நீதிமன்றில் ஆதாரங்கள்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஏராளமான உண்மைகள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல் தொடர்பான உண்மையான தகவல்களை வெளிப்படுத்தும் இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இதன் காரணமாக சுரேஷ் சலேயைச் சுற்றியுள்ள பலர் இன்று கவலையுடன் காணப்படுகின்றனர்.

சுரேஷ் சாலே தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதற்கு திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்து வருகின்றார் என்றும் பிரதியமைச்சர் மகிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தாமதப்படுத்தக் கூடாது! அருட்தந்தை சிரில் காமினி