உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தாமதப்படுத்தக் கூடாது! அருட்தந்தை சிரில் காமினி
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை எந்தக் காரணத்திற்காகவும் தாமதப்படுத்தவோ அல்லது திசை திருப்பவோ அனுமதிக்க முடியாது என்று அருட்தந்தை சிரில் காமினி வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள பேராயர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் இன்று (08) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட போது, அருட்தந்தை சிரில் காமினி மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் நோக்கத்தை நிறைவேற்ற இடமளிக்க போவதில்லை! சுரேஸ் சலேவுக்கான போராட்டத்தில் விமல் வீரவன்ச
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த விசாரணைகளை நிறுத்துவது அல்லது தடை செய்வது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
எந்தெந்தத் தடைகளை எதிர்கொண்டாலும் இந்த விசாரணைகளைத் தொடருமாறு அரசாங்கத்தையும் விசாரணைக் குழுக்களையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

குறிப்பாக இந்தச் செயல்பாட்டில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது. குற்றப் புலனாய்வுத் துறை உட்பட சட்டபூர்வமான விசாரணைக் குழுக்கள் தங்களது கடமைகளைச் சுதந்திரமாகவும் தடையின்றியும் ஆற்றுவதற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், சுரேஷ் சலே தமக்கு எதிராகத் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பாகச் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கருத்துக்களுக்கும் விளக்கம் அளித்தார்.
சுரேஷ் சலேவின் கைது
சுரேஷ் சலேவின் கைது மூலம் அவதூறு வழக்கைத் தடுக்க முயற்சி நடப்பதாகப் பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை என்று அருட்தந்தை சிரில் காமினி சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது, சுரேஷ் சலே தன்னை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து, வழக்கை சமரசம் செய்துகொள்ள முன்மொழிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் கூறிய அறிக்கையிலிருந்து சலேவின் பெயர் நீக்கப்பட்டால், வழக்கை சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருந்ததாகவும், ஆனால் தான் கூறியது உண்மை என்று இன்னும் நம்புவதால் அந்த முன்மொழிவை நிராகரித்ததாகவும் அருட்தந்தை கூறினார்.
'நான் இழப்பீடு செலுத்துவதைத் தவிர்க்க விரும்பியிருந்தால், அன்றே அதைச் செய்திருக்கலாம். ஆனால் நான் சொன்னது உண்மைதான் என்பதை நிரூபிக்கவும் காட்டவும் விரும்பினேன்' என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri