100 நாட்களுக்கு மேல் ICUவில் இருந்த சுரேஷ் சலே! நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கிய தகவல்
தேசிய புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை சாதாரண வோர்ட்டுக்கு இடமாற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறித்த அறிவித்தலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சிகிச்சைகள் இன்னும் முடிவடையவில்லை
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சுமார் நூறு நாட்களுக்கும் மேலாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று(22) முதல் அவர் சாதாரண வோர்ர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.எனினும் அவருக்கான சிகிச்சைகள் இன்னும் முடிவடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் வெகுவிரைவில் அவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றம் செய்யப்படுவார் என்றும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS..