நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! சற்றுமுன் வெளியானது நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு
புதிய இணைப்பு
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, சதித்திட்டம் மற்றும் உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 23,270-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சம்பந்தப்பட்ட 24 பிரதிவாதிகளில், 15 பேர் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பிரதிவாதிகளும் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றமற்றவர்கள் என விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்களால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் முக்கிய வழிகாட்டியாகவும், சதித்திட்டத்தின் முதன்மைச் சூத்திரதாரியாகவும் அடையாளப்படுத்தப்பட்ட நௌஃபர் மௌலவிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நிரந்தர மூன்று பேர் கொண்ட அமர்வால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நான்காம் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வாசிக்கும் நடவடிக்கை இன்று (22) மதிய உணவிற்கு பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
இந்த தீர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருகின்றது.
சஹ்ரான் ஹாஷிம் உட்பட எட்டு தற்கொலைத்தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மிக பெரிய வழக்கு என்பதால், அதை வார்த்தைகளில் விவரிப்பது கடினம் என்றும், 23,370 குற்றச்சாட்டுகளும் 9 தொகுதி குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திறந்த நீதிமன்றத்தில் ஒரே நேரத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குற்றப்பத்திரிகைகள் விளக்கப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை உட்பட ஏராளமான பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாப்பதற்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையும் அனைவரும் கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மூன்றாம் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு வாசிப்பு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் இன்று (22) பிற்பகல் 12.27 மணிக்கு தொடங்கியுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது பிரதிவாதிகளுக்கு 16 குற்றச்சாட்டுகளை வாசித்து காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதிவாதிகளின் மதிய உணவு இடைவேளைக்காக தீர்ப்பு இன்று (22) பிற்பகல் 1.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்களுக்கும் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
2019 ஆம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், நௌஃபர் மௌலவி உள்ளிட்ட பிரதிவாதிகள் தற்போது நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, கொலை மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு, கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட ஆயத்தினால் இன்று (22) அறிவிக்கப்பட உள்ளது.

முதலாம் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் இன்று (22) தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ள நிலையில் அலுத்கடை (Aluthkade) நீதிமன்ற வளாகத்தில் இன்று சிறப்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பல சிறப்புப் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அறிவிக்கப்படவுள்ள தீர்ப்பு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது.

நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன், கடந்த மாதம் 24ஆம் திகதி நிறைவடைந்தன.
இதற்கமைய, வழக்கின் தீர்ப்பு இன்று வழங்குவதற்கு மூவரடங்கிய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.