சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பும் சுரேஷ் ரெய்னா
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக கோப்பை தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் 2024 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை அணியால் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தோனியை சந்தித்த ரெய்னா
அதே சமயத்தில் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணி உட்பட எந்த அணியும் கடந்த ஏலத்தில் எடுக்காத நிலையில், அவர் தொடர்ந்து தற்போது நடைபெற்றுவரும் லெஜண்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் மீண்டும் இணைவதற்கான பணிகளை ரெய்னா தோனியை சந்தித்து எடுத்திருப்பதாக கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan