அரசியல் முடிவுகளில் ஒருதலைப்பட்சம்: சிறிதரனுக்கு எதிராக சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு
சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தானாகவே எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறிதரன் எம்.பி செய்த தவறு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் செய்தது தவறான நடவடிக்கை. ஆரம்பத்தில் இருந்து அவர் சிறுபான்மை கட்சிகள் சார்பான அங்கத்தவராக அரசியலமைப்பு சபையில் இருக்கின்றார்.
ஆகவே சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் என்பவற்றின் நிலவரங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு அவர் அந்த இடங்களில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் தானாகவே சில தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.

அது எதிர் தரப்பில் இருக்கக் கூடிய சிறிய கட்சிகளுக்கோ, சிறுபான்மை கட்சிகளுக்கோ விரோதமான முடிவுகளாக இருக்கிறது. அது நாடாளுமன்றத்தில் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இதனால் அவரது கட்சியும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. அவரை அந்த பொறுப்பில் இருந்து விலகுமாறு அவரது கட்சி ஆலோசனை கூறியுள்ளது.
அவரது நடவடிக்கை வெறுமனே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மாத்திரமல்ல. அதற்கு முன்னர் வந்த நியமனங்களில் கூட அவர் அவ்வாறு நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, அவர் ஏன் அவ்வாறு நடந்து கொள்கின்றார்.
ஏற்கனவே அந்த சபையில் ஆளும் தரப்பு, பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் என 19 பேர் இருக்கிறனர். அதில் சிறுபான்மை கட்சிகளை பிரதிபலிக்கக்கூடிய ஆளாகத் தான் இவர் இருக்க வேண்டும்.

அவர் அவ்வாறு கடந்த காலத்தில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆகவே, அவரது கட்சியும் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றது.
அத்துடன் சிறிதரன், ஒரு தமிழ் தேசிய இனத்தைப பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற அடிப்படையிலும், தமிழ் தேசிய இனத்திற்கு குரல் கொடுக்கின்றவர் என்ற அடிபபடையிலும் அவர் தான் செய்த நடவடிக்கை சரியா என்பதை சரிப்பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 45 நிமிடங்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam