திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளை எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையை இன்று(19) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்தக் கொண்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
திருகோணமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு, இன்று(19.01.2026) காலை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படாத நிலையில், வழக்கினை இன்று(19) பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு பௌத்த மதகுருமார்களும், ஏனைய பொதுமக்களும் பலத்த பாதுகாப்புடன் இன்றைய வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, பௌத்த மதச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சட்டத்தரணிகள் எனப் பெருமளவிலானோர் நீதிமன்ற வளாகத்தில் சமூகமளித்துள்ளனர்.
இதன் காரணமாக நீதிமன்றச் சூழலில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதிமன்றத்தைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில், நீதிமன்றின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.







சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 6 நாட்கள் முன்
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam