சர்வதேச விசாரணையை எதிர்கொண்டு இலங்கை அரசாங்கம் தனது பரிசுத்தத்தை மெய்ப்பிக்க வேண்டும்: பிரேமச்சந்திரன் கோரிக்கை
சனல் 4 ஊடகம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்தி குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த இரண்டு வாரங்களாக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சனல்4 வெளியிட்ட 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சாட்சியங்களை உள்ளடக்கிய ஆவணத் தொகுப்பொன்று பேசுபொருளாக அமைந்திருக்கின்றது.

மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)
ஈஸ்டர் குண்டுவெடிப்பு, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை போன்றவற்றிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த கோட்டாபய ராஜபக்ச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் சிறையில் இருந்த இன்றைய ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மேற்படி குண்டுத்தாக்குதல் மற்றும் கொலையின் பின்னணியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ச, பிள்ளையான் போன்றோர் இதனை மறுதலிக்கின்ற அதேசமயம், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் ஒரு சர்வதேச விசாரணை தேவை என்னும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
களவாடப்பட்ட ஆயுதங்கள்
அதேபோல் கர்தினால் மல்கம் ரஞ்சித் அவர்களும் சர்வதேச விசாரணையைக் கோரியிருக்கின்றார். இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இதனை ஒரு பொய்யான ஆவணம் என்று அதனைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக மட்டக்களப்பு படுவாங்கரையில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்கள் களவாடப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கொலை தொடர்பாக அப்பாவிகளான புனர்வாழ்வுபெற்றுத் திரும்பியிருந்த இரண்டு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். உண்மையில் இந்தக் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளான சஹ்ரான் குழுவினர் தப்பிச் செல்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தது.
அதுமாத்திரமல்லாமல் காத்தான்குடியில் ஒரு குண்டை வெடிக்கச் செய்து பரிட்சிக்கப்பட்டபோதுகூட சம்பந்தப்பட்டவர்கள் கைதுசெய்யப்படாமல் அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிய அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு பாதுகாப்புத்தரப்பிலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டதன் காரணமாகவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பதும் சனல்4 ஆவணங்களினூடாக அறியமுடிகிறது.
அதைப்போலவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலை பின்னணியிலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச பெயரும் சாட்சிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இவை தொடர்பாக எதிர்த்தரப்பிலிருக்கின்ற சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுவெளியில் இருக்கின்ற பலதரப்பினரும் ஒரு சர்வதேச விசாரணையைக் கோருகின்றனர்.
சர்வதேச விசாரணையை நிராகரித்தார்கள்
சர்வதேச விசாரணையைக் கோருவதின் அடிப்படைப்பொருளானது இலங்கையின் நீதித்துறையின்மீதும் இலங்கையின் பாதுகாப்புத்துறையின்மீதும் அவர்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள் என்பதாகும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றபொழுது, இறுதி யுத்தத்தில் ஏறத்தாழ 70,000பேர் வரை இறந்திருக்கலாம் என்று ஐ.நா. அறிக்கை கூறியது. அதுதொடர்பான விசாரணை ஒன்று தேவை என அந்த ஐ.நா அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
அதன் பிரகாரமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஐ.நா.சபை ஆலோசனை வழங்கியிருந்தது. ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களை இலங்கையின் மாறிமாறிவந்த அரசாங்கங்கள் நிராகரித்தன.
ஆண்டகை மல்கம் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு, ஜனாதிபதி, பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே சர்வதேச விசாரணையை நிராகரித்தார்கள். ஆனால் இன்று கர்தினால் உள்ளிட்ட சிங்கள தரப்பின் ஒரு பகுதியினர் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரிநிற்கின்றார்கள்.
ஏறத்தாழ 260 அப்பாவி மக்களும் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக தகுந்த சாட்சியங்களுடன் சனல் 4 ஒரு ஆவணத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக மிகப்பாரிய அளவிலான பொருளாதார நெருக்கடியில் மூழ்கியிருக்கும் இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மூலதனங்களைக் கவரவேண்டுமாக இருந்தால், இலங்கையில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நிரூபித்தாக வேண்டும்.
ஆகவே அவற்றை மனதில் கொண்டாவது அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
