தம்பியை கடத்திய பிள்ளையான்: ஊடகவியலாளர் பரபரப்பு வாக்குமூலம்(Video)
பிள்ளையானால் தனது தம்பி காணாமலாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தேவபிரதீபன் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று (11.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக தான் நீண்ட நாட்கள் தலைமறைவாகி வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார்.
பிள்ளையான் தரப்புடன் இணைந்து தனது தம்பியை செயற்பட கோரி வற்புறுத்தியதாகவும், அதற்கு மறுத்ததன் காரணமாக தனது தம்பி காணாமலாக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan