மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்ட கருணா குழு! உறவினர்களை கடத்திய TMVP (VIDEO)
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரவு செலவுத் திட்டத்தின் போதான வாக்களிப்பினை புறக்கணிக்குமாறு கருணா குழுவினர் தன்னை அச்சுறுத்தி மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியான தனது மகளை கடத்த முயற்சித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலினையும் மீறி தான் தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் முதலாவது வாக்கெடுப்பில் கலந்துகொண்டமையினால் அரசாங்க உத்தியோகத்தரான தனது சகோதரனை கடத்தி மட்டக்களப்பில் மறைத்துவைத்து தன்னை அச்சுறுத்தியமையினால் குடும்பத்தினரின் அழுத்தத்தினால் இரண்டாவது வாக்கெடுப்பினை புறக்கணித்ததாகவும் கூறியுள்ளார்.
எனவே இவ்வாறான சம்பவங்களை கருணா குழுவினர் மேற்கொண்டதினை தான் நேரடியாக அறிந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 வெளிப்படுத்திய காணொளி தொடர்பில் எமது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
