தமிழக அரசு கச்சதீவினை பெற்றுக்கொள்ளப்போகிறதா: சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி
தமிழக அரசு கச்சதீவினைப் பெற்றுக்கொள்ளப்போகிறதா? இலங்கை அரசாங்கம் அதனை கொடுப்பதற்கு தயாராக உள்ளதா? என்ற பல கேள்விகளுக்கு நாம் பதில் காண வேண்டியுள்ளது.
எனவே இதனை பிரச்சினையாக மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
அண்ணாமலையின் அதிகாரம்

கச்சதீவினை இலங்கை அரசாங்கம் கொடுக்கும் எனில், அதற்கு தமிழ் மக்களுடைய ஒப்புதல் குறித்து பேச வேண்டும். ஆகவே இதற்கான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லை.
இந்த விடயமானது ஊடகங்களின் பேசுபொருளாக காணப்படுகின்றதே தவிர, இரு அரசாங்கமும் இது குறித்து வாய் திறந்து பேசவில்லை என்பதே யதார்த்த உண்மையாகும்.
எனவே
எடுக்கோள்களை ஒரு பிரச்சினையாக எடுக்க வேண்டாம், அப்படியாக இருக்கட்டும்
இது தொடர்பாக டெல்லி அரசாங்கம் எதுவும் பேசவில்லை. அண்ணாமலை தமிழ்நாட்டில்
பாஜக தலைவர் என்பதை தவிர அவருக்கு அதிகாரம் இருப்பதாக நான் அறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 12 மணி நேரம் முன்
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan