தமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக் கூட பெற முடியாத நிலை : சுரேஸ் பிரேமச்சந்திரன் (Photo)
தமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக் கூட பெற முடியாத நிலையிலேயே இந்த நாடு உள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (01.10.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
விவசாய செய்கைகளுக்கான திகதிக் குறிப்பு
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கைகளுக்கான திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் மயிலத்தமடு, மாதவனைக்கு கால்நடைகளை
கொண்டு செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 36 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
