காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போரின் இறுதிக் கட்டத்தில் சரணடைந்த சிறுவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று(01-10-2023)கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அலுவலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
இதன் போது கிளிநொச்சியில் கடந்த 2474 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினமான இன்று குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதாவது போரின் இறுதி கட்டத்தில் சரணடைந்த சிறுவர்களுக்கு நீதி கோரியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


