சுமையில்லாத பெருந்தோட்ட மக்களுக்கு, ஒதுக்கீடுகள் இல்லை : வடிவேல் சுரேஸ்
மலையக மக்கள் அரசாங்கத்துக்கு சுமையாக இருப்பதில்லை என்று பாதீட்டில் நிதியமைச்சா் தொிவித்திருந்தாா். எனினும் நாட்டின் சுமையை கொடுக்காத பெருந்தோட்ட மக்களுக்கு பாதீட்டில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் வடிவேல் சுரேஸ் தொிவித்துள்ளாா்.
மலையக வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு பாதீட்டில் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
பெருந்தோட்ட வீதி செப்பனிடலுக்கு உாிய ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை நாவலப்பிட்டியில் இருந்து பத்தனை சந்திக்கு செல்லும் பாதை செப்பனிடப்படவில்லை என்று அவா் சுட்டிக்காட்டியபோது, குறுக்கிட்ட, அமைச்சா் ஜோன்ஸ்டன் பொ்ணான்டோ, குறித்த பாதையை தாம் செப்பனிட்டு தருவதாக உறுதியளித்தாா்.
இதேவேளை முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பதுளை சிம்யாபுர பிரதேசமும் பாதைகளும் அபிவிருத்திச் செய்யப்படவேண்டு்ம் என்று வடிவேல் சுரேஸ் கோாிக்கை விடுத்தாா்.