நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நட்டம்
நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கி செயலிழப்பதால், நாளாந்தம் அரசாங்கத்திற்கு 20 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 6ஆம் திகதி அல்லது 10ஆம் திகதி வரை குறித்த மின்பிறப்பாக்கியின் உற்பத்தி நிறுத்தப்படும் என இணைச் செயலாளர் பொறியியலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்துள்ளார்.
மின் பிறப்பாக்கி செயலிழப்பதால், இழக்கும் மின்சாரத்தை தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்பிறப்பாக்கி தற்காலிகமாக இடைநிறுத்தம்
இதனால் தேவையற்ற செலவுகளை பொதுமக்கள் சுமக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளாந்தம் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த நிலையில் நிலக்கரி இருப்புகளைப் பாதுகாப்பதற்காக, தேசிய மின்கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று மின்பிறப்பாக்கிகளில் ஒன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 51 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
