சிச்சியின் செய்மதி: தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் அதிர்ச்சி தகவல்
சிச்சியின் செய்மதி இலங்கை வான் பரப்பில் நிலைப்படுத்தப்படவில்லை என சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (International Telecommunication Union/ITU)நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவே சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நிறுவனமாகும்.
கணக்கறிக்கைகள்
சுப்ரீம் செட்1 மற்றும் சுப்ரீம் செட் என்ற பெயரில் இலங்கை வான்பரப்பில் எந்தவொரு செய்மதியும் இல்லை என்றே ITU நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, சுப்ரீம் செட் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சைனா செட் 12 என்ற பெயரிலும் தேடிப்பார்த்ததில் இல்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் செட் நிறுவனம் 2012ஆம் ஆண்டு முதலீட்டு சபையில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அச்சந்தர்ப்பத்தில் சுப்ரீம் செட் நிறுவனத்தின் கணக்காய்வு நிறுவனமான ரன்வத்த என்ட் கம்பனி 2012 தொடக்கம் 2013ஆம் ஆண்டுவரை கணக்கறிக்கைகளை சமர்ப்பித்துள்ளது.
குளறுபடிகள்
மேலும் 2014 தொடக்கம் 2015களில் கணக்காய்வு அறிக்கையை முதலீட்டு சபைக்கு வழங்கவில்லை.
2016ஆம் ஆண்டு சுப்ரீம் செட் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் சைனா கிரேட் வோல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக முதலீட்டு சபைக்கு சுப்ரீம் செட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தகவல்கள் வழங்கலில் சில குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவே தோன்றுகிறது. செய்மதி தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள இதுவே சிறந்த வழியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



