சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை: வருண ராஜபக்ச
சுப்ரீம் செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இலங்கை முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை என்று வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளருமான வருண ராஜபக்ச இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள்
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் இலங்கை முதலீட்டுச் சபையினால் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவையாகும்.
முதலீட்டுச் சபையின் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளருடன் தொலைபேசி வாயிலாக உரையாடி நான் அதனை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளேன்.
தேவையில்லாத தலைகுனிவு
குறித்த பணிப்பாளர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகரவின் நெருங்கிய உறவினராவார்.
அவ்வாறான நிலையில் சுப்ரீம் செட் தொடர்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பது அரசாங்கத்துக்குத் தேவையில்லாத தலைகுனிவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




