பிரதமருக்கு எதிராக சதித்திட்டமா! ஹரிணி - வசந்த கருத்து தொடர்பில் சாடும் எதிர்கட்சிகள்
சுப்ரீம் சாட் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவும் அமைச்சர் வசந்த சமரசிங்கவும் நாடாளுமன்றத்தில் அளித்த முரண்பாடான பதில்கள், நாட்டின் அமைச்சரவை அதன் கூட்டுப் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதைக் காட்டுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியலமைப்பின் படி 43:2 பிரிவு அமைச்சரவை கூட்டாகப் பொறுப்பேற்பதையும், மற்றும் நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெளிவாகக் கூறுகிறது, ஆனால் அரசியலமைப்பின் அந்தப் பிரிவு இப்போது ஒரு அரசாங்க அமைச்சரால் மீறப்பட்டுள்ளது என்று பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சுப்ரீம் சாட்
“ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வந்து சதித்திட்டங்களைப் பற்றிப் பேசினார். தனக்குத் தோன்றினால் சதித்திட்டங்களை அடக்குவதற்குச் சட்டங்களை இயற்றுவதாகவும் அவர் மிரட்டினார்.
கடந்த காலத்தில் அவர் எப்படி நடந்துகொண்டார் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை.
மேலும், பிரதமர் நாடாளுமன்றத்தில் சுப்ரீம் சாட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அந்தக் கேள்வி நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீட்டு வாரியத்திற்கு சொந்தமானது.
நிதி அமைச்சகத்தின் செயலாளர் அதற்கான பதிலை தயாரிக்க வேண்டும்.
பிரதமரின் பதில்
இது குறித்து நெருக்கடி ஏற்பட்டிருந்தால், அது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சுப்ரீம் சாட் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, சுப்ரீம் சாட் ரொக்கெட் ஏவப்பட்டது என்பது எந்தவொரு வளங்களையும் பயன்படுத்தாத ஒரு தனியார் முதலீடு என்று கூறியுள்ளது.
மேலும், பிரதமரின் பதிலுக்குப் பிறகு, அமைச்சர் வசந்த சமரசிங்க முரண்பாடான பதிலைக் கொடுத்தார்.
அமைச்சரவையில் இந்த முரண்பாடு என்ன? பிரதமர் ஒரு விடயத்தைச் சொல்லும்போது, அமைச்சர் வசந்த சமரசிங்க இன்னொன்றைக் கூறுகிறார். இந்தப் பதில் பிரதமரை சங்கடப்படுத்துவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்ற கேள்வி நமக்கு எழுகிறது” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
