ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விடுதலையான இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருந்த நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரும் உச்ச நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களில் நால்வர் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலையானன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.
நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை
இந்நிலையில் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்திருந்தது.
இதற்கமைய, இலங்கையர்களான சாந்தன், ரொபேட், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் 10 நாட்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை இடம்பெறுவதாக திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தற்போது திரிச்சியில் உள்ள இலங்கை அகதிகளிற்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை அனைவரும் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் முருகன் என்னும் சிறீகரன் தான் பிரித்தானியா செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதனால் அவரை அங்கு அனுப்புவதற்கான முயற்சி இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
இதற்காக பிரித்தானிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுஅங்கிருந்து கிடைக்கும் பதிலிற்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.