ஜனநாயக குரல்களை பொலிஸார் கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்: குரலற்றவர்களின் குரல் அமைப்பு

Sri Lankan Tamils Vavuniya Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Anti-Govt Protest
By Thileepan Jan 11, 2024 02:43 PM GMT
Report

ஜனநாயக குரல்களை பொலிஸார் கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் மு.கோமகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்த போது ஆர்ப்பாட்டம் செய்ததாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஒன்றின் தலைவி சி.ஜெனிற்றா தொடர்பில் இன்று (11.01.2024) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குரலற்றர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் பொதுமக்கள்

ஒருங்கிணைப்புக்குழு

கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார்.

ஜனநாயக குரல்களை பொலிஸார் கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்: குரலற்றவர்களின் குரல் அமைப்பு | Suppress Democratic Voices With Help Of Police

அதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஜனாதிபதியை நேரில் சந்தித்து, 'ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் செய்யப்பட்ட தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது?' என்பதற்கான பதிலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுப்பதற்காக அங்கு சென்றிருந்தனர்.

எனினும், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள், பொலிஸாரினால் வழிமறிக்கப்பட்டார்கள். அதன்போது, ஜனநாயக நாட்டில் தமக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமையை ஆட்சேபித்து, காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவ்விடத்தில் நின்றவாறு அகிம்சை வழியில் தமது எதிர்ப்பை பதிவுசெய்ய முற்பட்டிருந்தனர்.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

ஜனநாயக விரோதங்கள்

அச்சந்தர்ப்பத்தில், கவனயீர்ப்பில் ஈடுபட்ட தாய்மாரை சினங்கொள்ளச் செய்து, அங்கு வலிந்ததொரு அமைதியின்மையை தோற்றுவித்த பொலிஸார், கைகளில் ஒப்படைத்த தம் உறவுகளுக்கு நீதி கேட்டு தெருப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் பாதிக்கப்பட்டவர்களை மனிதநேயமற்ற முறையில் பலவந்தமாக அடக்கி ஒடுக்கி பேருந்துக்குள் இழுத்துச் சென்று அடாவடியாக கைது செய்துள்ளனர்.

ஜனநாயக குரல்களை பொலிஸார் கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்: குரலற்றவர்களின் குரல் அமைப்பு | Suppress Democratic Voices With Help Of Police

இது மிக மோசமானதொரு உரிமை மறுப்பாகும். இதுபோன்ற ஜனநாயக விரோதங்கள், நாட்டினுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு குந்தகத்தை ஏற்படுத்தவல்லன. ஜனநாயகப் பெயர் பொறிக்கப்பட்ட இலங்கை தேசத்தினுடைய ஆளுகைத்தரப்பின் ஒற்றை வாக்குறுதிக்கு மதிப்பளித்து, தமது உற்றச் சொந்தங்களை உயிர்ப்புடன் கையளித்த உறவுகள், தம் அன்பிற்குரியவர்களை மீளத்தருமாறு, அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது எனக்கேட்டு 14 ஆண்டுகாலமாக தொடர் போராட்டங்களை நடாத்தி வருகிறார்கள்.

அந்தப் போராட்டங்களில் பங்கெடுத்த வயோதிபப் பெற்றோர்களில் பலர் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டு உயிர்நீத்துள்ளார்களே தவிர, இவர்களுக்கு இதுவரை நீதிகிட்டவில்லை. இதுபோன்று, போரின் பெயரில் படுகாயப்படுத்தப்பட்ட பல்வேறு மனக்காயங்களுக்கு மருந்திட வேண்டிய ஆட்சியாளர்கள், அதனைச் செய்ய முயற்சிக்காது மென்மேலும் காயங்களை ஏற்படுத்திக்கொண்டு உதட்டளவில் நல்லிணக்கம் பற்றிப் பேசுவது முரண்நகையானது.

சென்னை சென்ற யாழ். பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

சென்னை சென்ற யாழ். பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

அடிப்படை உரிமை

பாதிக்கப்பட்ட குடிமக்களது நீதி நியாயத்திற்கான குரல்களை, பொலிஸார் கரம்கொண்டு அடக்கி தீர்வினைக் காண்பதனூடாக நாட்டை மீண்டும் அழிவுக்கே இட்டுச்செல்வதாக அமையும். எனவே, நீதிகோரி குரலுயர்த்திய, வவுனியா வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத் தலைவி சி.ஜெனிற்றா காவல் துறையால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரை உடனடியாக விடுவிக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினராகிய நாம் மனிதநேய சிவில் அமைப்பென்ற வகையில் வலியுறுத்த கடமைப்படுகிறோம்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளித்து கருத்துச் சுதந்திரத்திற்கு செவிசாய்த்து ஜனநாயக பண்புடைய உணர்வு வெளிப்பாடுகளுக்கான தடைகளை அகற்றி, நடந்து முடிந்த யுத்தத்திற்கான காரண காரியங்களை கண்டடைந்து அவற்றுக்கு தாமதமற்ற தீர்வினை காண்பதன் மூலமே நாட்டில், உண்மையான நல்லிணக்கத்தை உறுதிசெய்ய முடியும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறோம் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதித் தேர்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US