பட்டினியில் இருந்து மக்களை மீட்க ஒரு அணியுடன் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவேன்-ராஜித
பட்டினியில் இருந்து மக்களை மீட்பதற்கான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
போருக்கு நிகரான பொருளாதார நெருக்கடி
தான் தனியாக அவ்வாறான ஒத்துழைப்பை வழங்க போவதில்லை எனவும் ஒரு அணியுடன் அரசாங்கத்திற்கான அந்த ஆதரவை வழங்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் உணவை தேடிக்கொள்ள முடியாமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் காலத்தில் அரசியல் பேசக்கூடாது.
போர் நடைபெற்ற காலத்தில் நாடு பாரதூரமான நெருக்கடிக்குள் விழுந்த நேரத்தில் நான் அரசாங்கத்தில் இணைந்து, அந்த நடவடிக்கைக்கு உதவினேன். தற்போதும் அந்த போருக்கு நிகரான பொருளாதார நெருக்கடியே நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூன்று பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ள நிலையில், அவர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.