புதிய அமைச்சர்கள் இந்த வாரம் பதவிப்பிரமாணம்-குமார வெல்கமவுக்கும் அமைச்சு பொறுப்பு
அமைச்சரவை அந்தஸ்துள்ள சில அமைச்சர்கள் இந்த வாரம் பதவிப்பிரமாணம் செய்த தயாராகி வருவதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜித, வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகிய புதிய அமைச்சர்கள்
இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர்களான குமார வெல்கம, ராஜித சேனாரத்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர்.
குமார வெல்கம ஏற்கனவே போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்துள்ளதுடன் அவருக்கு மீண்டும் அந்த பதவி வழங்கப்பட உள்ளதுடன் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவியேற்க தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
துறைகளை இழக்கும் அமைச்சர்கள்
துமிந்த திஸாநாயக்க மின்சக்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட பின்னர், தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றங்களுக்கு உள்ளாகும்.
இதனடிப்படையில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களிடம் இருக்கும் இந்த துறைகள் புதிய அமைச்சர்களுக்கு பகிரப்படும் என பேசப்படுகிறது.