தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு! திகாம்பரம் வெளிப்படை
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவ யாருக்கும் தனி அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆதரவு இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கா அல்லது தேசிய மக்கள் சக்திக்கா வழங்கப்படும் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய சபை கூட்டம் (15) அன்று ஹட்டனில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தலைமையில் கூடிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
“ஏனைய கட்சிகளுடன் இணைந்து தான் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.
பேச்சுவார்த்தை
ஆனால், உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து விவாதிக்க தனது கூட்டணிக்கு பல அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தாலும், அந்த அரசியல் கட்சிகள் யாருடனும் இவ்விடயம் குறித்து பேசவில்லை.
சில உள்ளூராட்சி மன்றங்களுக்கு எமது அனுமதி இல்லாமல் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கியுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 3 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
