ஈரானின் மேலும் 8 தளபதிகள் பலி! அதிகரித்துள்ள இஸ்ரேலின் தாக்குதல் நகர்வு
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 8 தளபதிகள் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை(IRGC) அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் இராணுவத்தை வழிநடத்திய மூத்த இராணுவ தளபதிகள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆழ்ந்த இரங்கல்
அவர்களின் தியாகத்திற்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் மஹ்மூத் பகேரி, தாவூத் ஷேகியான், முஹம்மது பாகெர் தாஹெர்பூர், மன்சூர் சஃபர்பூர், மசூத் டயூப், கொஸ்ரோ ஹஸ்ஸானி, ஜாவத் ஜோர்சாரா மற்றும் முஹம்மது அகஜாஃபரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் நகரங்கள், அணு சக்தி நிலையங்கள் மற்றும் ஈரானின் உயர்மட்ட இராணுவ தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam