இந்திய அரசாங்கத்தினால் மன்னாரில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
இலங்கை - இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஹஜ் (Hajj) பொருநாளை முன்னிட்டு மன்னாரில் (Mannar) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மற்றும் முசலி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நேற்றைய தினம் (17.06.2024) குறித்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
மன்னார் அல் - அஸ்ஹர் தேசிய பாடசாலையில் வைத்து 78 குடும்பங்களுக்கும் முசலி தேசிய பாடசாலையில் வைத்து 80 குடும்பங்களுக்கும் பத்தாயிரம் ரூபா பெறுமதியான இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய துணைத் தூதரகம்
இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதேவேளை, இந்நிகழ்வில் இந்தியத் தூதரக அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |