ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நபரினதும் முதல் சொத்து, இந்த வாடகை வரியிலிருந்து விடுவிக்கப்படும் அதேநேரம், சாதாரண வருமானம் ஈட்டும் மக்களிடத்தில் இந்த வரி அறவிடப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
வரி விதிக்கப்படாது..
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், உத்தேச வாடகை வருமான வரி குறித்தும் இந்த சபைக்கு கருத்தை தெரிவிக்க வேண்டும். நாம் செல்வ வரியொன்றை அறிமுகப்படுத்துகிறோம்.
மேலும் அதன் வரையறை மிக அதிகமாக இருக்கும். எனவே, நாட்டின் 90% வீடுகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதைப் பற்றி பொதுமக்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீடு பாதுகாப்பாக இருக்கும்.
ஆனால் தரவரிசையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் வாடகை வருமான வரி விதிக்கிறோம். அதன் பிறகு எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த மதிப்பீடுகள் மாகாண சபைகளுக்கு சொந்தமானது.
தரவரிசைப் பட்டியலின்படி இந்த வரி விதிக்கப்பட்டால், பெறப்படும் பணம் மாகாண சபைக்கு சொந்தமானது என்று நீதிமன்றம் கூறலாம்.
எனவே, அதற்கான அனுமதியை பாராளுமன்றத்தில் பெற வேண்டும். எனவே வாடகை வருமான வரி என்ற வித்தியாசமான சூத்திரத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இந்த வருமான வரி மத்திய அரசுக்குச் சொந்தமானது.
நாங்கள் பொதுவாக இந்த மதிப்பீடுகளைப் பயன்படுத்துகிறோம். தற்போதுள்ள சட்டச் சிக்கலைத் தீர்க்கவே இதைச் செய்தோம். ஆனால் வரி வரையறை மிக அதிகம் என்பதை குறிப்பிட வேண்டும்.
இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீடுகளைப் பற்றி கவலைப்பட வேண்டி ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் நாம் செல்வ வரி விதிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள பல கோடீஸ்வரர்கள் தங்களுக்கும் வரி விதிக்கப்படுமோ என்று மிகவும் கவலைப்படுவதையும் நான் அறிவேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |