கொழும்பில் அரச சேவை ஓய்வூதிய சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுப்பு
கொழும்பு - பத்தரமுல்லை நாடாளுமன்ற வீதிக்கு முன்பாக அரச சேவை ஓய்வூதிய சங்கங்களின் தேசிய அமைப்பினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (18.06.2024) இடம்பெற்று வருகின்றது.
கோரிக்கைகள்
அரச சேவையாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க வலியுறுத்தி குறிப்பாக 2020ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் (2020.01.01) திகதியிற்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாகவும் அந்தக் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தியும் இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை போராட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தின்போது ஏற்படும் கலகத்தை தடுப்பதற்கு நீர்த்தாரை பிரயோக வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டக்காரா்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
