சுன்னாகத்தில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் கைது
சுன்னாகம் - குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டுக்களுடன் தொடர்புடைய ஒருவரை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அண்மைய நாட்களில் குப்பிளான் மற்றும் புன்னாலை கட்டுவன் பகுதிகளில் நீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு போனதாக முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன.
குற்றதடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவல்
இந்த நிலையில் யாழ். மாவட்ட குற்றதடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குப்பிளான் வடக்கு கம்பம் புலம் பகுதிக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதன்போது யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரவினர் 7 துவிச்சக்கர வண்டிகள், 4 மோட்டார்கள், 2 எரிவாயு சிலிண்டர்களை கைப்பற்றியதோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
