ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்தை பார்வையிட்ட கைத்தொழில் அமைச்சர்
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி (Sunil Handunnetti) இன்று (7) கிளிநொச்சிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.
முதலாவதாக ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு சென்ற அமைச்சர் உப்பு உற்பத்தியின் செயற்பாடுகளை பார்வையிட்டார்.
உற்பத்தி செய்யும் இடங்கள்
நவீன இயந்திரங்கள் கொண்டு அடுத்த மாதத்திலிருந்து முன்னெடுக்கப்படவுள்ள உப்பு உற்பத்தி செயற்பாட்டின் முன்னேற்றத்தினையும் உற்பத்தி செய்யும் இடங்களையும் பார்வையிட்டார்.
இதன்போது, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.சிறீபவாணந்தராஜா ஆகியோரும் தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் பரந்தன் இரசாயன தொழிற்சாலை பகுதிக்கு சென்று தொழிற்ச்சாலையின் மீள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 59 நிமிடங்கள் முன்

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

Optical illusion: பந்திற்குள் மறைந்திருக்கும் "5" களில் மறைந்துள்ள "3" ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
