13ஆவது திருத்தத்தை முற்றாக எதிர்க்கின்றது ஜேவி.பி.! ஹந்துன்நெத்தி தெரிவிப்பு
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மாகாணசபையை அறிமுகப்படுத்தும்போது அரசமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் இருந்தது.
எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் ஒன்று

இப்போது 13 உம் நடைமுறையில் இல்லை; மாகாண சபையும் நடைமுறையில் இல்லை. தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்ளாத அரசியல் தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
அப்படியென்றால் தெற்கு மக்கள் 13ஐ ஏற்கவில்லை. எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் ஒன்றுதான்.
அதுமட்டுமல்ல, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய - எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய
தீர்வை எமது அரசாங்கத்தால் மாத்திரமே முன்வைக்க முடியும். நாம் ஆட்சிக்கு வந்தால்
அதைச் செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam