இலங்கை அரசியலில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் - நீதிமன்ற விசாரணை ஆரம்பம்(படங்கள்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமானது.
இதன்போது சந்தேக நபா்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 300 இற்கும் அதிகமானவர்களைக் கொலை செய்தமை, மற்றும் சுமார் 500 பேர் காயமடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நௌபர் மௌலவி, சஜித் மௌலவி, மொஹமட் மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, மொஹமட் சனஸ்தீன் மற்றும் மொஹமட் ரிஸ்வான் உட்பட 25 சந்தேக நபர்களுக்கு எதிராக பொலிஸார், 23,270 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்
கொலைக்கு சதி செய்தமை, உதவி செய்தமை, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்தமை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுக்கள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் அடங்குகின்றன..