அநுர அரசாங்கத்துக்குள் எந்தப் பிளவும் இல்லை! மிகவும் பலமாகச் செயற்படுகின்றது என பிரதி அமைச்சர் பிரதீப் பதிலடி
இன்றைய அரசு மிகவும் பலமாகவும், வலுவாகவும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைத் தலைவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்களுக்கு தடையில்லை
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பணிகளில் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் வீணான பேச்சுக்களுக்கு அரசாங்கம் எவ்வித தடைகளையும் விதிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருக்கட்டும் என்றார்.
தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று எதிரணிகளால் கூறப்படும் கருத்துக்கள் குறித்து தெளிவுபடுத்திய அவர், அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய மக்கள் சக்திக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவையாகும்.

மக்கள் விடுதலை முன்னணி கட்சியைப் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும், நாட்டை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவும் இணைந்து ஒரு குடும்பமாக, ஒற்றுமையாக வழிநடத்துகின்றனர். எனவே கட்சிக்குள் எந்தவிதமான பிளவுகளும் பிணக்குகளும் கிடையாது என்றார்.
சர்வதேச உறவுகள் மற்றும் மக்கள் ஆதரவு
மேலும் சர்வதேச உறவுகள் மற்றும் மக்கள் ஆதரவு குறித்து அவர் கூறுகையில், நாளுக்கு நாள் அரசுக்குச் சர்வதேச நாடுகளின் ஆதரவு பெருமளவில் கிடைத்து வருகின்றது.
அண்மையில் சிவராசா அனோஜனின் மரண தண்டனையிலிருந்தான விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு நேர்மறை நகர்வுகளால் சர்வதேச மட்டத்தில் நாட்டுக்குரிய மதிப்பும், அரசின் மீது வெளிநாட்டு அமைப்புகள் மற்றும் தலைவர்களின் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
உண்மையான ஆட்சியை இந்த நாட்டு மக்களே கொண்டு வந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் அரசுக்கு ஆதரவாகத் திரள்வதை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் தடுக்க முடியாது என்றார்.
எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் இதோ Cineulagam
புலம்பெயர்ந்தோர் வேலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த நபர்: பல்பொருள் அங்காடியின் பதிலடி News Lankasri