மகிந்த ராஜபக்சவுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்.. சபையில் பகிரங்கப்படுத்திய நாமல்
நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தொடர்பாகவும் நாடாளுமன்றத்திலே கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அமைச்சர்களும் விமானத்தில் பயணம் செய்தபோது அவர்களை கொலை செய்த திட்டமிட்டதாக அந்த வழக்கில் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்துக்கு எதிராக குரல் கொடுத்த ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து தற்போது அரசாங்கம் பல்வேறுபட்ட விளக்கங்களை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியதில் ஏதாவது குறை இருந்தால் அதனை சரி செய்யலாம் தானே என அவர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
மகிந்தவின் உயிரைப் பறிக்கும் பாரிய சதித் திட்டம்! நீதிமன்ற சாட்சியத்தை அம்பலப்படுத்தும் சரத் வீரசேகர