பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்படவுள்ள ரிஷி சுனக்கின் சட்ட வரைபு
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா தொடர்பான சட்டவரைபு குறித்து அந்நாட்டில் உள்ள அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களும் அச்சம் கொள்ள தேவையில்லை என பிரித்தானியாவில் உள்ள மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
குறிப்பாக சட்டவிரோதமாக புலம்பெயரும் புகலிடக்கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் கூறியுள்ளார்.
மேலும், “ரிஷி சுனக்கின் சட்டவரைபுக்கு எதிரான கருத்துக்கள் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன.
எனினும், அவருடைய சட்டவரைபுக்கு ஏற்றல் போல் நாடாளுமன்றில் பெரும்பான்மை வாக்குக்களுடன் நிறைவேற்ற கூடிய நிலை அதிகமாக காணப்டுகிறது.
அத்தோடு கடும் விவாதத்தை ஏற்படுத்திய பிரதமர் ரிஷி சுனக்கின் ருவாண்டா திட்டம் மட்டுமே புலகிடக் கோரிக்கையாளர் நெருக்கடியை குறைத்துள்ளதாக சுனக்கின் தரப்பினர் கருதுகின்றனர்” என அருண் கணநாதன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் சுனக்கின் ருவாண்டா திட்டம் தொடர்பிலும், பிரித்தானிய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ஏற்படும் சவால்கள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
