உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் : எம்.ஏ. சுமந்திரன்
தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உடனடியாக நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
| எனது பதவிக் காலத்துக்குள் அரசியல் தீர்வு நிச்சயம்! ஜனாதிபதி ரணில் உறுதி |

பொதுமக்களின் ஆணை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிப்பதாவது,
‘’தற்போதைய நாடாளுமன்றம் பொதுமக்களின் ஆணையை பெற்ற நாடாளுமன்றம் கிடையாது. அதற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணை ரத்தாங்கியுள்ளது.
தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுண கட்சி, மக்கள் ஆணையை இழந்துவிட்டது. எனவே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள்.

உடனடி தேர்தல்
அவர்களின் ஆதரவில் பதவிக்கு வந்திருக்கும் ஜனாதிபதியும் அதற்கான தகுதியை இழந்தவராகவே கருதப்பட வேண்டும்.
எனவே இவர்கள் அனைவரும் பதவி விலகி, உடனடி தேர்தல் ஒன்றுக்குச் செல்ல வேண்டும். அதன் மூலம் பொதுமக்களின் புதிய ஆணையை பெற்ற அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.