ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களுடன் பேசிய பின்னரே இறுதி முடிவு : சுமந்திரன் தெரிவிப்பு
அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் கலந்துரையாடல்களுக்குப் பின்னரே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி தீர்மானிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்(M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் என்ன விடயத்தை எடுத்து வருகிறார்கள் என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும், பின்னர் நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடுவோம். இதற்கு பின்னரே எங்கள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
நில விநியோக திட்டம்
ஜனாதிபதித் தேர்தலில், தனது தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறியதாக தெரிவிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அவ்வாறு நினைத்தால், அது ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நில விநியோக திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார்.அரசாங்கத்தின் நில விநியோக திட்டம் சிறந்தது என்றும் இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை களமிறக்குவதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கிறது என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam