தொடர்ச்சியாக மீறப்படும் அரசியலமைப்பு : ஐரோப்பிய ஒன்றியத்தினரிடம் சம்பந்தன் விடுத்த கோரிக்கை
அரசியலமைப்பாக இருக்கட்டும் வெவ்வேறு அரசாங்கங்களுடன் செயற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களாக இருக்கட்டும் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்த தூதுக்குழுவினரிடம் சம்பந்தன் முறையிட்டதாக சுமந்திரன் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வந்த தூதுக்குழுவினர் சம்பந்தன் மற்றும் சுமந்திரனை இன்று(05.06.2024) சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்துள்ளளனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், விசேடமாக தூதுக்குழுவினரின் நோக்கம் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல் பற்றி ஆராய்வதாகவுள்ளது. தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பாகவும் அவர்கள் மிகவும் விரிவான பேச்சுவார்த்தையை நடத்தினர்.
தேர்தல் தொடர்பாக எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி இருக்கின்றோம். மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி, நாடாளுமன்றம் தொடர்ந்து இருக்க முடியாது.
தேர்தல் தொடர்பாக எங்கள் மக்கள் 70 வருடங்களாக கொடுக்கின்ற ஆணை தெராடர்ச்சியாக மீறப்படுகின்றது எனவும், தேர்தல்களை மேற்பார்வை செய்வதது மட்டுமல்ல, தேர்தலிலே மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற ஆணை நிறைவேற்றப்படுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |