நுவரெலியாவில் பாற்சோறு சமைத்து கொண்டாடிய தோட்டத்தொழிலாளர்கள்
பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, நுவரெலியா (Nuwaraeliya) - பூண்டுலோயா மக்கள் பாற்சோறு சமைத்து கொண்டாடியுள்ளனர்.
பெருந்தோட்ட மக்களுக்கு 1700 சம்பளத்தை வழங்க வேண்டுமென அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானிக்கு இடைக்கால தடை உத்தரவை வழங்க வேண்டுமென கம்பனிகள் நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்திருந்தது.
இந்நிலையில், அவ்வாறு தடை உத்தரவு வழங்க முடியாதென நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளதையடுத்து, 1700 ரூபா நாளாந்த வேதனம் கிடைக்குமென பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்டத்தில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
தோட்ட நிர்வாகத்தினர்
இதன்போது, பேர்லன்ஸ் தோட்டம், ஹெரோ தோட்டம், கயப்புக்கலை தோட்ட மக்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
