இலங்கை அணிக்கு மாத்திரம் ஏன் மாற்றாந்தாய் வசதிகள் : சபையில் சஜித் கேள்வி
20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்காக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கடுமையான சிக்கல்
இதன் காரணமாக இலங்கை அணியினரின் தங்குமிடம் மற்றும் போட்டிகளை திட்டமிடுவது தொடர்பாக கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
ஐ.சி.சி விதிமுறைகளின்படி இந்தக் குழு ஒரு ஹோட்டலில் இருந்து அதிகபட்சம் 45 நிமிட நேரத்தில் செல்லக்கூடிய இடத்திலேயே போட்டிகள் இடம்பெறும்.
எனினும் இலங்கை அணி தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து மைதானத்துக்கு செல்ல ஒன்றரை மணித்தியாலங்கள் வரை செல்வதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் காரணமாக அணி பயிற்சிப் போட்டிகளைத் தவறவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இலங்கை அணிக்கு மட்டும் ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேவையான வசதிகளை வழங்காவிட்டால் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயம் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும் என்றும் நாளை ஒரு பதில் வழங்கப்படும் என்றும் அவை முதல்வர் பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |