சுமந்திரன் யாழிலா!! அல்லது ரணிலின் வீட்டிலா? அமைச்சர் பகிரங்கம்
கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில் விக்ரமசிங்க என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் கருத்து
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'' ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கின்றது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது ரணிலின் வீட்டில் இருந்து கதைக்கின்றாரா?
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு உட்பட கறுப்பு ஜுலைக் கலவரம், நூலகம் எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்தான் ரணில் விக்ரமசிங்க. இப்படிபட்ட நபரை பாதுகாக்கும் விததத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது.
சட்டம்
இந்தியாவில் இருந்துநாடு திரும்பும் இலங்கை அகதிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி ஒரு வருடமாகின்றது. இதனை முன்னிட்டு முதலாம் திகதியில் இருந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பமாகின்றது. வடக்கில் இருந்துதான் அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்.
இந்நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமம். பலம் பொருந்தியவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படாது என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல எப்படியான நபரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்பட வேண்டும். இந்த விடயத்தில் எவருக்கும் விதி விலக்கல்ல.''என தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam
