மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சுமந்திரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகிய கட்சிகள் நேற்று யாழில் சந்தித்து பேசிய போதே குறித்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பு விவகாரம் சம்பந்தமாக அரசாங்கம் எடுத்திருக்கிற நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிற நடவடிக்கைகள் சம்பந்தமாக பேசியிருக்கிறோம்.
இணைய வேண்டும்..
அண்மைக் காலமாக சில ஆயத்தங்கள் செய்வதாக அரசாங்கம் கூறிவருகிறது. எவ்வளவு தூரத்திற்கு அது உண்மையானது என்பது தெரியவில்லை. பிரதம மந்திரி, நீதி அமைச்சர் உள்ளிட்டோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்கலாம் என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்.
இது சம்பந்தமாக எங்கள் இரண்டு கட்சிகளும் இணைந்து இந்த முயற்சியிலே ஈடுபட போகிறது. இதன் பொழுது தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் ஏனைய தரப்புகளும் எங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam