கலஹாவில் தோன்றிய பாரிய இரத்தினக்கல்.. அதிகாரிகளுடன் முரண்பட்ட மக்களால் பரபரப்பு
கலஹாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரத்தினக்கல் என சந்தேகிக்கப்படும் ஒரு பாறையின் மாதிரிகளை எடுக்க சென்ற தேசிய இரத்தினக் கல் மற்றும் நகைகள் ஆணையத்தின் அதிகாரிகளை அங்குள்ளவர்கள் தடுத்ததை அடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கலஹாவில் உள்ள ஒரு இந்து கோவிலுக்கு அருகில் பாறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
தெல்தொட்டவின் கீழ் கல்லந்தன்ன பகுதியில் உள்ள ஸ்ரீ முத்து மாரி அம்மன் கோவில் அருகேயே இந்த கல் காணப்படுகின்றது.
பரிசோதனை நடவடிக்கை
பேரழிவால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்குள்ள ஒருவர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, இந்தக் கல் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தின் அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று பாறையின் மூன்று துண்டுகளை மாதிரிகளாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அவர்களை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு, எதற்காக இந்த மாதிரிகளை எடுக்கின்றனர் என கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர், பகுப்பாய்வு செயல்முறைக்காக எடுத்து செல்வதாக அதிகாரிகள் விளக்கிய பின்னர் அங்குள்ள சிலர் மற்றும் பொலிஸார் முன்னிலையில் மாதிரி பாறைத் துண்டுகளை பரிசோதனைகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.