ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை: சுமந்திரன் வலியுறுத்து
தேர்தல் இலஞ்சத்தினை ஜனாதிபதியே மேற்கொள்வதை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழு இதற்கு எதிரான உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு லயன்ஸ் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்ற அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக கீழ் நிலைக்கு இறங்கி ஜனாதிபதி பொய்களை கூறுகின்றார்.
தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடு
அவர் தேர்தல் விதிமுறைகளை தானே மீறும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிலையில் மக்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



