வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்திற்கு உதவும் புலம்பெயர் உறவுகளின் பணம்! சுமந்திரன்

M A Sumanthiran Eastern Province Northern Province of Sri Lanka
By Ashik Dec 01, 2022 09:40 AM GMT
Report

நாட்டில் போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு புனர்வாழ்வின் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று (30.11.2022) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மீண்டு எழுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொருளாதார வீழ்ச்சி

விசேடமாக வடக்கு, கிழக்கில் நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட சற்று வித்தியாசமான ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. போர் முடிவடைந்த பிறகு போரின் தாக்கத்திலிருந்து மீண்டு எழுந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், தற்போது பொருளாதார வீழ்ச்சி நாடு பூராகவும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்திற்கு உதவும் புலம்பெயர் உறவுகளின் பணம்! சுமந்திரன் | Sumanthiran Press Meet

ஆனால் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு முன்னதாக எங்களுடைய பிரதேசங்களில் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை, இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் சூழ்நிலைகள் உள்ளடங்களாக இவ்வாறு பல விதமான பிரச்சினைகள் இருந்து கொண்டே உள்ளன.

வெளிநாடுகளுக்கு போயுள்ள எமது உறவுகள் பலர் தமது உறவுகளுக்கு நிதி உதவிகளை மேற்கொள்வதன் காரணமாக சில தேவைகள் அவர்களுக்கு நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் வடக்கு, கிழக்கின் பொருளாதாரம் என்றால் வெளிநாடுகளில் இருந்து இங்குள்ள உறவுகளுக்கு அனுப்பும் பணம் தான் பிரதான காரணமாக உள்ளது.

இங்கே தொழில் வாய்ப்புக்களை மேற்கொண்டு வருவாயை தேடுவதை விட உறவினர்கள் ஊடாக இங்கு அனுப்பப்படும் நிதி எமது பொருளாதாரத்திற்கு அடித்தளமாக இருந்துள்ளது. நாட்டில் அந்நிய செலாவானி இல்லாத சூழ்நிலையில் காணப்படும் நிலையில் வடக்கு, கிழக்கில் நிலைமை சற்று மாறுபட்டதாக சில மாதங்களில் காணக்கூடியதாக உள்ளது.

வடக்கு, கிழக்கின் நிலைமை

ஏற்கனவே பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள மாகாணங்கள் என்ற அடிப்படையில் இந்த பொருளாதார வீழ்ச்சியும் எங்களை மிக வெகுவாகவும் மோசமாகவும் பாதிக்கும். அதற்கு முகம் கொடுக்கும் வகையில் சில திட்டங்களையும், நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

வடக்கு, கிழக்கின் பொருளாதாரத்திற்கு உதவும் புலம்பெயர் உறவுகளின் பணம்! சுமந்திரன் | Sumanthiran Press Meet

சில விடயங்கள் குறித்து நாங்கள் அரசாங்கத்துடன் பேசுகின்றோம். வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த மக்களிடம் இருந்து எங்களின் பிரதேசத்திற்கு அவ்வாறான முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கு பாரிய முயற்சியும் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறு மேற்கொள்கின்ற போது நாட்டிற்கும், எமது பிரதேசத்திற்கும் பொருளாதார மீள் எழுச்சிக்கு முக்கிய விடயமாக அமையும்.

இவ்வாறான விடயங்கள் எமக்கு கை கொடுக்கும் வரை எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் வீழ்ச்சி அடைந்து விடக்கூடாது என்பதன் காரணத்தினால் நாங்கள் சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, மாணவர்களுக்கு இவ்வாறான உதவிகளை மேற்கொண்டு வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US