நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது..! ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த சுமந்திரன்

Batticaloa Anura Kumara Dissanayaka M A Sumanthiran Jaffna Public Library
By Rakesh May 21, 2026 12:05 PM GMT
Report

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நான் ஜனாதிபதிக்கு நினைவூட்ட விரும்புகின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர்  எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(20.05.2026) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வில் உரையாற்றும்  போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

நீண்டகால விளைவுகளை குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது.. மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

நீண்டகால விளைவுகளை குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது.. மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

யாழ்ப்பாணம் பொது நூலகம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

எங்களுடைய தமிழரசுக் கட்சியின் ஆளுகைக்கு உட்பட்ட மட்டக்களப்பு மாநகர சபையின் பொது நூலகத்தைத் திறந்து வைப்பதற்கான அழைப்பு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட போதே அவர் இந்த நிகழ்வில் பங்குபற்ற வருவார் என்று நான் உறுதியாக நம்பினேன்.

அதற்குக் காரணம் உண்டு,  அவர் அடிக்கடி யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றிப் பேசுபவர்,  யாழ்ப்பாணம் மக்கள் அந்த நூலகத்துக்குள் நுழையும் போது செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே நுழைவார்கள், நூலகத்தைக் கோயில் போன்று பயன்படுத்துவார்கள் என்று அவர் அடிக்கடி கூறியிருக்கின்றார்.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது..! ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த சுமந்திரன் | Sumanthiran Need Power Ensure Absence Of War

அண்மையில் கூட கம்பன் விழாவில் தாம் ஆற்றிய உரையிலும் நூலகத்தையும் அதன் பெறுமதியையும் சிலாகித்து அவர் பேசியிருந்தார். ஆகையினால் நூலகத் திறப்பு விழாவுக்கு எங்கள் அழைப்பை ஏற்று அவர் கட்டாயம் வருவார் என்று நாங்கள் நம்பினோம். அந்த அழைப்பை ஏற்றமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

இங்கு நாடாவை வெட்டி பொது நூலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அது தொடர்பான நினைவுக்கல்லின் திரை நீக்கத்தை என்னைச் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

ஒருவகையில் இது எங்கள் பணிகளை நாங்கள் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்மாதிரி.

நாட்டின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முன்னுதாரணமாகவும், அடையாளமாகவும் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆயுதமேந்திப் போராட்டம்

நேற்றுக் கூட ஜனாதிபதி உரையாற்றிய சமயம் இந்த நாட்டில் இனியொரு யுத்தம் நடைபெற அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி கூறியிருந்தார். அவர் ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு குழுவில் இருந்து வந்தவர். நாங்கள் ஆயுதமேந்திப் போராடிய ஒரு மக்கள் கூட்டம். இரு தரப்பினருமே இனி யுத்தம் புரிவதில்லை என தீர்மானத்துக்கு வந்திருக்கின்றோம்.

ஆனால், நாட்டில் இனி யுத்தம் ஏற்படக் கூடாது என்றால், அதற்கு அர்த்தமுள்ள அதிகாரப் பயிர்வு செய்யப்பட வேண்டும்.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படக்கூடாது..! ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த சுமந்திரன் | Sumanthiran Need Power Ensure Absence Of War

அதற்கான அடையாளமாகவே இன்று பொது நூலகத்தை நாடா வெட்டி திறந்து வைப்பதையும் அதை ஒட்டிய நினைவுக்கல்லை திரை நீக்கம் செய்து வைக்கின்ற விடயத்தையும் நாங்கள் பகிர்ந்து கொண்டோம் என நான் நினைக்கின்றேன்.

அந்த அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு செய்யப்பட வேண்டிய அவசியத்தை நான் ஜனாதிபதிக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார். 

பதின்ம வயது இளைஞன் ஓட்டிய கெப்வண்டி விபத்து

பதின்ம வயது இளைஞன் ஓட்டிய கெப்வண்டி விபத்து

செனட்டர் டெலா ரோசாவின் கைதை தடுத்து நிறுத்த பிலிப்பைன்ஸ் நாட்டு உயர் நீதிமன்றம் மறுப்பு!

செனட்டர் டெலா ரோசாவின் கைதை தடுத்து நிறுத்த பிலிப்பைன்ஸ் நாட்டு உயர் நீதிமன்றம் மறுப்பு!

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US