நீண்டகால விளைவுகளை குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது.. மட்டக்களப்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு
நீண்டகாலத்தின் விளைவை எங்களுக்கு குறிகாலத்தை தீர்க்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (20.05.2026) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாக்க தலைமையில் முழு நாடும் ஒன்றாக போதைப் பொருருக்கு எதிரான வேலைத்திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் ஒரு அரசு என்ற வகையிலே எங்களது பிரச்சினைகளை இனம் கண்டு எங்களது நாட்டை கட்டி எழுப்புவதற்காக பல்வேறுபட்ட நிகழ்ச்சி திட்டங்களை வகுத்திருக்கின்றோம்.
விதிக்கப்பட்ட தடைகள்
முதலாவது எங்களுக்குள்ள சவாலாக இருப்பது சக்தி வாய்ந்த ஒரு பொருளாதாரத்தை கட்டி எடுப்பதற்கான சவாலாகும் உங்களுக்கு தெரியும் எங்களுக்கு தெரியும் நாங்கள் கடந்த காலங்களிலே பொருளாதாரத்துக்கு பல்வேறுபட்ட முட்டுக்கட்டைகள் ஏற்பட்டன. அதற்காக பல்வேறு சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம் என்று.

பல்வேறுபாடு நாடுகள் மூலமாக எங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் மூலமாக அல்லது வரிகள் மூலமாக இது பொருளாதாரத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதேபோல் தான் டித்வா சூறாவெளி இலங்கையின் சரித்திரத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அழிவாக கருதப்படுகின்றது. அதற்கும் நாங்கள் மிகவும் சக்தி வாய்ந்த முறையிலே முகம் கொடுத்தோம் ஏனெனில் அது எமது உள்பிரச்சினை என்பதன் காரணமாகும்.
அண்மைக்காலமாக மத்திய கிழக்கை மையமாக வைத்து யுத்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த யுத்தத்தின் மூலமாக பாதிப்பு யாருக்கு வருது எனப் பார்த்தால் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் அதேபோன்று பொருளாதாரத்தின் பின்தங்கிய நாடுகளுக்கும் எந்தவிதமான வித்தியாசம் இன்றி எல்லாவிதமான நாடுகளுக்கும் பாதிப்புக்கு ஏற்படுத்தியுள்ளன.
எங்களது பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற போது அதன் இரண்டு பிரிவுகளுக்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டி இருக்கின்றது." என குறிப்பிட்டுள்ளார்.
You may like this..