சுமந்திரன், சாணக்கியன் வெளிநாட்டு பயணம்! சம்பந்தன் வெளியிட்டுள்ள விடயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோரை கலந்துரையாடல் ஒன்றுக்காக, இரண்டு நாடுகள் அழைத்துள்ளமை தொடா்பில் கருத்துக்கூற விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினா்களையும், கலந்துரையாடல் நடத்த வருமாறு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த விடயம் குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எமது செய்திச்சேவையிடம் தொிவித்துள்ளாா்.
ஏற்கனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கனக ஈஷ்வரன், சட்ட விரிவுரையாளராக இருந்த கலாநிதி நிர்மலா சந்திரகாசன் உள்ளிட்ட குழுவினர் கடந்த 13 ஆம் திகதி அமெரிக்கா சென்றுள்ளனர்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவா்கள் அங்கு சென்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுமந்திரனின் அமெரிக்க பயணம், நிறைவடைந்தவுடன், அவரையும், சாணக்கியனையும் வருமாறு கனடாவும் பிரித்தானியாவும் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 23ம் திகதி ஒட்டோவாவிலும், 25 ஆம் திகதி லண்டனிலும், வெளிவிவகார அதிகாரிகளுடன் இவா்கள் இருவரும் கலந்துரையாடல்களை நடத்துவா் என்று தெரிவிக்கப்படுகின்றது.
You My Like This Video
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri